அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரியில் தீரன்சின்னமலை உருவச்சிலைக்கு கொங்கு இளைஞர் பேரவை மரியாதை செய்தனர்.;
அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு மரியாதை செய்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள்
அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவச்சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அமைந்துள்ள தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு, அவரது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்டச்செயலாளர் அய்யூர் தயாளன் தலைமையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில், நிர்வாகிகள் ஆட்டோ பாண்டி, நாகேந்திரன், சரவணன், சங்கர், ரஞ்சித் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.