மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கு தமிழக முதலமைச்சரை அழைக்க முடிவு

முதல் பரிசு கார், தங்கக்காசு, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ஆகிய பரிசுகள் மாடுகள்- மாடுபிடி வீரர்களு வழங்கப்படும்;

Update: 2022-01-05 09:45 GMT

 கிராம கமிட்டி நிர்வாகிகள் தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் உறுப்பினர்கள்

பாலமேடு  ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு  தமிழக முதலமைச்சரை அழைப்பதென  கிராம கமிட்டி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டு, வருகின்ற 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று அன்று நடைபெற உள்ள நிலையில் பாலமேடு கிராம கமிட்டி நிர்வாகிகள் மகாலிங்க சுவாமி படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் கிராம கமிட்டி நிர்வாகிகள் தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும்  உறுப்பினர்கள் செய்தியாளரிடம் கூறியதாவது :தமிழக முதலமைச்சரை இந்த ஜல்லிக்கட்டுக்கு அழைப்பதற்காக இருக்கிறோம். மேலும், அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவுதலையொட்டி அரசு விதிகளின்படி, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். மேலும் சிறந்த மாட்டுக்கான பரிசு நாட்டு பசு மாடு மற்றும் கன்று குட்டி, மாடுபிடி வீரர்களுக்கான முதல் பரிசு கார் , மேலும் தங்க காசு, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News