மதுரையில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-10-01 07:50 GMT

மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், கல்லணை, கோட்டைமேடு கொண்டையம்பட்டி விட்டங்குலம் 15.பி.மேட்டுபட்டி, பன்னை குடி அச்சம்பட்டி குலமங்களம், பூலாம்பட்டி வலசை, தண்டலை உள்ளடக்கிய கிராமங்களில், 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முல்லை பெரியார் பாசன பகுதியாகும்.

இங்கு, தற்போது அறுவடைக்கு காத்திருந்த நெல் பயிர்கள் இரவு முழுவதும் பெய்த கன மழையால் தண்ணீரில் மூழ்கியது. இதனால், விவசாயிகள் பெரும்பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News