அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலம் முத்தாலம்மன் ஆலய குடமுழுக்கு விழா
இதில் ,வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்;
மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் ஒன்றியம் சேந்தமங்கலம் கிராமத்தில், அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது .இதில் ,வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் தனராஜ், அதிமுக ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.