பாலமேட்டில் சமூக இடைவெளி மறந்த தற்காலிக சந்தைகள்: தொற்று பரவும் அபாயம்

மதுரை அருகே பாலமேட்டில், சமூக இடைவெளியை கடைபிடிக்காத தற்காலிக காய்கறி சந்தையால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.

Update: 2022-01-23 09:45 GMT

முழு ஊரங்கு காரணமாக நேற்று மாலை முளைத்த தற்காலிக காய்கறிச் சந்தையில், சமூக இடைவெளியை மறந்து திரண்ட பொதுமக்கள். 

மதுரை மாவட்டம் பாலமேட்டில், நேற்று மாலை திடீரென சாலையை ஆக்கிரமித்து பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலக வாசல் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக நடைபாதை காய்கறி கடைகள் உருவாகின. அங்கு, காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் முண்டியடித்து காய்கறிகளை வாங்கி சென்றனர். திடீரென்று உருவான தற்காலிக சந்தையால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

அதில், பலபேர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல், காய்கறிகளை வாங்கிச் சென்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்ட ஜல்லிக்கட்டு காரணமாக அமைச்சருக்கு கொரானா நோய் தொற்று ஏற்பட்டதால், தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் ,தொடர்ந்து பாலமேட்டில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக் கவசம் அணியாமல், வாரச்சந்தையில் கூடிய கூட்டத்தார் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தற்காலிக சந்தையை இடம் மாற்ற வேண்டும் அல்லது நோய்த்தொற்று குறையும் வரை, தற்காலிக சந்தையை மூட வேண்டும் என்று அரசுக்கு, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

Similar News