மதுரை அருகே சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

மதுரை அருகே சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. வெங்கடேசன்

Update: 2021-08-07 14:42 GMT

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு வாகனத்தை, சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்


சோழவந்தான் பேரூராட்சி சார்பாக, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இளநிலை உதவியாளர் முத்துகுமார் வரவேற்றார். கொரோனா மூன்றாவது அலை பரவுதல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு வாகனத்தை, சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கொடியசைத்து, தொடங்கி வைத்தும், இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன், மேற்பார்வையாளர்கள் திலீபன்சக்கரவர்த்தி, வினோத்குமார் பேரூராட்சி பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, தினசரி மார்க்கெட் கடைகளை , ஏற்கனவே கடை நடத்தி வந்த சிறு வியாபாரிகள், ஏற்கெனவே, கடை நடத்தியவர்களுக்கு மீண்டும் கடையை வழங்க வேண்டும் என, வெங்கடேசன் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை வைத்தனர் வியாபாரிகள்.

Tags:    

Similar News