மதுரை அருகே அலங்காநல்லூரில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
மதுரை அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ,முடுவார்பட்டி ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு பணிகள் - கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கதிரவன், பிரேமா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் , தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக, அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை துறை உழவர் நலத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்ட விவசாயிகள் பதிவு முகாம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை இணைந்து சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.