அலங்காநல்லூரில், காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.
ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கத்தை கண்டித்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்டேட் பேங்க் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது;
ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கத்தை கண்டித்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்டேட் பேங்க் முன்பாக மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் நூர் முகமது, மாவட்ட மகளிர் அணித்தலைவி செல்லப்பா சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, திலகராஜ், வட்டாரத்தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, குருநாதன், பழனிவேல், நகரத்தலைவர்கள் சசி, முருகானந்தம், முத்து பாண்டி, அமைப்பு சாரா மாவட்டத்தலைவர் சோனைமுத்து, இளைஞரணி காங்கிரஸ் தொகுதி தலைவர் வருசை முகமது,பாலமேடு சந்திரசேகர் மனித உரிமை வட்டாரத் தலைவர் சரந்தாங்கி முத்து, முன்னாள் தலைவர் மலைகணி, திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறிக்கும் வகையில் அவரை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் இதில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.