மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து அலங்காநல்லூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசு பதவி விலக வலியுறுத்தி மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2023-07-27 09:00 GMT

மதுரை அலங்காநல்லூரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூரில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக ஆளும் மாநிலமான  மணிப்பூரில் ஆதிவாசி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் பல்வேறு குற்ற செயல்களை செய்தும் மக்களை கொன்று குவிக்கும் ஒன்றிய மோடி அரசை பதவி விலக வலியுறுத்தி மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் சுப்பராயாலு, காந்திஜி, முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மனித உரிமை மாவட்ட தலைவர் சரந்தாங்கி முத்து, தலைவர்கள் வைரமணி, சசிகுமார், திரவியம் அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சோனை முத்து, வட்டார தலைவர் மலைக்கனி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி கலந்து கொண்டனர்  பாலமேடு சந்திரசேகரன், அமைப்புசாரா மாவட்டச்செயலாளர் முருகன், தவமணி, செல்லத்துரை, தர்மர், பாலமுருகன், சோனை, லெட்சுமணன், அன்பழகன், வீராசாமி, வேலன், திருப்பதி,சின்னகருப்பன், நடராஜன், சத்தியமூர்த்தி, மலைச்சாமி, நாகமலை செல்லமணி, தமிழன், வீரச்சாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News