மதுரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தீவிர ஓட்டு வேட்டை

மதுரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ். போஸ், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2022-02-11 10:45 GMT

சோழவந்தானில், காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.போஸ் வாக்கு சேகரித்தார். 

மதுரை மாநகராட்சி 73 வது வார்டில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி  வேட்பாளராக,  எஸ்.எஸ்.போஸ் போட்டியிடுகிறார். இவர், முத்துப்பட்டி, டிவிஎஸ் நகர் பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

அவருடன் திமுக மாவட்ட செயலாளர் விஜய் சேகர், பார்வையாளர் பைகாரா விஜயன், காங்கிரஸ் கட்சி 73 வது வார்டு தலைவர் நவசிவன் உட்பட திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் வாக்கு கேட்டு உடன் சென்றனர்.

Tags:    

Similar News