மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 -க்கும் மேற்பட்டவர்களை சோழவந்தான் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்;
மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பில், சோழவந்தானில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, நீட் தேர்வு ரத்து, இந்தி திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, தமிழக ஆளுநரை திரும்ப பெறக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 -க்கும் மேற்பட்டவர்களை சோழவந்தான் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சோழவந்தானில் போலீசாரை தாக்கிய இருவர் கைது
சோழவந்தான் அருகே நகரி நான்குவழிச் சாலையில் கடந்த 11 ஆம் தேதி சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இமானுவேல் சேகரன் குரு பூஜை விழாவிற்கு சென்று கொண்டு இருந்த ஒரு சிலர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து தகராறு ஈடுபட்டனர் .
இதனால், இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஆனது. இதில் போலீஸாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, சோழவந்தான் ஆய்வாளர் பால்ராஜு விசாரணை செய்தார்.இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை வலை வீசி தேடி வந்தனர்.இதில், அம்பலத்தடி கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் 21, பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருச்செந்தில் 20 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.