திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கல்லூரி நிறுவனர் நாள் விழா

விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த ஆசியுரை வழங்கினர்;

Update: 2022-03-12 06:30 GMT
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கல்லூரி நிறுவனர் நாள் விழா

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நிறுவனர் ஜயந்தி விழா

  • whatsapp icon

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 51-வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குத்துவிளக்கு ஏற்றி, இறை வணக்கம்  தமிழ் தாய் வாழ்த்துடன்  விழா  தொடங்கியது. கல்லூரி பஜனை குழு மாணவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு பாடலை பாடினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக மதுரை ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி முதன்மையர் மருத்துவர் ரத்னவேல் கலந்து கொண்டார்.  விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த முன்னிலை வகித்தார். கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த ஆசியுரை வழங்கினார்.

விவேகானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் கல்லூரி ஆண்டறிக்கை லயை வழங்கினார். துறை சார்ந்த பாடப்பிரிவுகள், நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்வேறு சேவை சார்ந்த கல்லூரி குழுவில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மதுரை மருத்துவக் கல்லூரி முதன்மையர் மருத்துவர் ரத்னவேல் பரிசுகளை வழங்கினார்.

கல்லூரியின் முதன்மையர் முனைவர் சஞ்சீவி நன்றி கூறினார். நிகழ்ச்சியினை அகர தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News