விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கல்
மதுரை அருகே வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டாரம், நெடுங்குளத்திலும், மதுரை மேற்கு ஒன்றியத்தில் தோடனேரியிலும் 150 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையில் தென்னை மரக்கன்று வாங்குவதற்கு பரவை ஜி.ஹச்.சி.எல் மீனாட்சி மில்ஸ் நிறுவனத்தின் சார்பாக 1500 தென்னை மரக்கன்றுக்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட வருவாய் கோட்டாசியர் ஷாலினி தலைமை தாங்கி, மரக்கன்றுகள் வழங்கினார்.துணை இயக்குநர் அமுதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி இயக்குநர் கமலலெஷ்மி வரவேற்றார்.
இதில், உதவி இயக்குநர்கள் பாண்டி, பாலமுருகன், வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள். முடிவில் ,சமூக பொறுப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் நன்றி கூறினார்.
உலகில் தென்னை உற்பத்தியிலும் உற்பத்தி திறனிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 19 மாநிலங்களிலும் 4 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 2.10மில்லியன் ஹெக்டேரில் தென்னை பயிராகிறது.
இந்தியாவில் தென்னைத் துறை பயிர் சாகுபடி, விளைபொருள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை பதர்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் வணிக நடவ க்கைகள் உள்ளிட்ட தொழில்களில் சுமார் 12 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்தியாவில் தென்னை அதிகளவில் பயிராகும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தியாவின் மொத்த உற்பத்தி பரப்பில் 89%, உற்பத்தியில் 91% ஆகும். நாட்டில் தென்னை சாகுபடி செய்பவர்களில் 98% பேர், 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்களே ஆகும். நமது நாட்டில் 2021-22-ஆம் ஆண்டில் 19247 மில்லியன் காய்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆண்டு உள்நாட்டு வருமானத்தில் தென்னையின் பங்கு ரூ. 3,10,000 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.
நாட்டில் தென்னை சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி நவீனபடுத்தலுக்காக தென்னை தொழில்துறையை மேம்படுத்தலுக்காகவும் தென்னையின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் இவற்றின் மூலம் தென்னை விவசாயிகள் நலனை பாதுகாப்பதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்தியாவில் அமைக்க․பட்ட தென்னை வளர்ச்சி வாரியம் 12.1.1981 அன்று செயல்படத் தொடங்கியது. தென்னை வளர்ச்சி வாரியம் கொச்சியை தலைமையிடமாகக்கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.