சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நீர்நிலை கரைகளில் தூய்மை பணிகள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நீர்நிலை கரைகளில் தூய்மை பணிகள் நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் டாக்டர் செல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் எனது நகரம் எனது குப்பை நீர் நிலைகளின் கரைகளின் ஓரம் தூய்மைப்படுத்தும் பணிகள் செய்து முடிக்கப்பட்டது.
பேரூராட்சித்தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர், செயல் அலுவலர் சுதர்சன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர், வைகை ஆற்று கரையோரம் தூய்மை பணிகள் செய்து கரையினை சுத்தப்படுத்தினர். தொடர்ந்து, கரையோரம் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.