சோழவந்தானில் தூய்மைப் பணி விழிப்புணர்வு முகாம்
மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணி முகாம் நடத்தப்படுகிறது;
சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்தினையும் தூய்மையான நகரமாக மாற்றிட மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோழவந்தான் பேரூராட்சி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டு சைக்கிள் பேரணி மூலம் பொது மக்களுக்குகழிவுகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் , சோழவந்தான் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர், தன்னார்வலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகள் செய்து மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
தூய்மை இந்தியா திட்டம் 2.0 குறித்து பிரதமர் மோடி விடுத்த செய்தி.. தூய்மை என்பது ஒரு நாள், பதினைந்து நாட்கள், ஒரு வருடம் அல்லது ஒரு சிலருக்கான பணி மட்டுல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தூய்மை என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும், ஒவ்வொரு ஆண்டும், தலைமுறை தலைமுறையாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பெரும் இயக்கமாகும். தூய்மை என்பது ஒரு வாழ்க்கை முறை, தூய்மை ஒரு வாழ்க்கையின் தாரக மந்திரம்.
குஜராத்தின் சுற்றுலாத் திறனை மேம்படுத்துவதற்காக குஜராத் முதலமைச்சராக தாம் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் நினைவு கூர்ந்தார், அங்கு அவர் "நிர்மல் குஜராத்" திட்டத்தின் மூலம் தூய்மைக்கான தேடலை "ஜன் ஆந்தோலனாக" (மக்கள் புரட்சி)யாக மாற்றியது.தூய்மை இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மகத்தானவை. இன்று இந்தியா, நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் டன் கழிவுகளைப் சுத்திகரிக்க்ப்படுகிறது.
2014 ஆம் ஆண்டில் நாடு, தூய்மை இயக்கத்தைத் தொடங்கியபோது, நாட்டில் ஒவ்வொரு நாளும் உருவாகும் கழிவுகளில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே சுத்திகரிக்கப்பட்டது. இன்று நாம் தினசரி கழிவுகளில் 70 சதவீதத்தைப் சுத்திகரிக்கிறோம். இப்போது நாம் அதை 100%ஆக அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கான மேம்பட்ட ஒதுக்கீடுகள் பற்றியும் பிரதமர் பேசினார். 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய 7 ஆண்டுகளில், அமைச்சகத்திற்கு சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், 2014 ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது நாட்டின் நகரங்களின் வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராப்பேஜ் கொள்கை குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் புதிய ஸ்கிராப்பிங் கொள்கை, கழிவிலிருந்து செல்வம் என்ற இயக்கத்தையும், சுழற்சி பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.