சோழவந்தான், ஜெனகை மாரியம்மன் கோயில் மூன்று மாத கொடியேற்றம்

சோழவந்தான், ஜெனகை மாரியம்மன் கோயில் மூன்று மாத கொடியேற்றம் வெகு விமரிசையாக நடந்தது.;

Update: 2022-04-05 14:03 GMT

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா உற்சவத்தை முன்னிட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பாக மூன்று மாத கொடியேற்றம் பக்தர்கள் புடைசூழ அதி விமரிசையாக நடைபெற்றது.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பேரிடர் நோய் தடுப்பு காலத்திற்குப்பின்பாக கொடியேற்றம் நடைபெற்றது . ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் வரும் அமாவாசையை, அடுத்த திங்கட்கிழமை மூன்று மாத கொடி ஏற்றுவது வழக்கம்.

அதன் அடிப்படையில், வைகை ஆற்றிலிருந்து சிறப்பு பூஜை செய்து நான்கு ரத வீதிகளில் பவனி வந்து மூன்று மாத கொடியேற்றம் நடைபெற்றது. எதிர்வரும் வைகாசி மாதம் பதினைந்தாம் தேதி பூச்சொரிதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்கும் தொடர்ந்து ஆறாம் தேதி திங்கள் இரவு கொடியேற்றம் நடைபெறும்.

வைகாசி மாதம் 31ஆம் நாள் காலை பால்குடம், மாலை அக்னிச்சட்டி நடைபெறும். மறுநாள் புதன்கிழமை மந்தை களத்தில் பூக்குழி வைபவம் நடைபெறும். ஆனி, ஏழாம் தேதி நான்கு ரத வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறும்.

தொடர்ந்து ,எட்டாம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள்.

முதல் மூன்று மாத கொடியேற்றத்தை முன்னிட்டு, சமயநல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News