சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் திருக்கல்யாணம்

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஜனக நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு;

Update: 2022-04-07 09:07 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜனக நாராயண பெருமாள் பங்குனி உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஜனக நாராயணப் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், புண்யாவாகனம் நடைபெற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. ரகுராம பட்டர் மாப்பிள்ளை வீட்டார் ஆகவும், வரதராஜ் பண்டிட்ஜி பெண்வீட்டார் ஆகவும் திருமண சீர்வரிசை சுமந்துகொண்டு மாலை மாற்றி மாங்கல்ய தானம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஜனக நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு மஞ்சள் கயிறு குங்குமம் உள்ளிட்ட திருமண தாம்பூல பைகள் வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் காணிக்கையை மொய்யாக எழுதி அவற்றை பெற்றுச் சென்றனர்.

Tags:    

Similar News