சோழவந்தான் ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்: பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.;

Update: 2022-05-19 08:48 GMT

ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா.

மதுரை மாவட்டம், சோழவந்தான், 46 எண் ரோடு, முதலியார் கோட்டையில் ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இன்று காலை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி பூர்ணா ஹூதியுடன் நிறைவுற்றது.

பிரசாத் சர்மா தலைமையில் விஸ்வநாத சர்மா, சதீஷ் பட்டர்கள் யாக வேள்வி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, புனித நீர் தெளிக்கப்பட்டு. தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News