மதுரை அருகே சோழவந்தான் பகுதிகளில் குடியரசு தினவிழா
Cholavanthan Republic Day Celebration மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ளஎம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளியின் தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் .;
சோழவந்தான் கலைவாணி, மெட்ரிக் பள்ளிீீயில் நடந்த குடியரசு தின விழா.
Cholavanthan Republic Day Celebration
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி வளாகத்தில்
தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர், கொடி வணக்கம் செலுத்தப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் எஸ் .எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், செயல் அலுவலர் செல்வகுமார், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ,எம் வி எம் மருதுபாண்டியன், வள்ளி மயில்,செல்வராணி, குருசாமி, நிஷாம் கௌதம ராஜா, சிவா முத்து செல்வி ,சதீஷ், குருசாமி, கொத்தாலம் செந்தில்மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம்,
இளநிலை உதவியாளர் கல்யாண சுந்தரம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சோனை, பாண்டி, பூவலிங்கம் ,செல்வம், அசோக் மற்றும் பேரூராட்சி அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ளஎம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளியின் தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் .
இதில் எம் வி எம் குழும தலைவரும் தொழிலதிபருமான மணி முத்தையா வள்ளி மயில் மற்றும் பள்ளி முதல்வர் செல்வம் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் கட்டுரை போட்டி பேச்சு போட்டி இலக்கியப் போட்டி போன்ற தனித்திறனை நிரூபிக்கும் போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ந்து மாணவ மாணவிகளின் மாறுவேட போட்டிகள் நடைபெற்றது இதில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் உருவம் தாங்கி மாணவ மாணவிகள் மேடையில் வந்து தங்களது திறமை வெளிப்படுத்தினர் .குடியரசு தின விழா போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.