சோழவந்தான் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா: வைகை ஆற்றில் மின்னொளி அமைப்பு

Cholavanthan Mariamman Temple Vaikasi Festival

Update: 2022-06-14 07:30 GMT

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா தொடர்ந்து 13 ஆவது ஆண்டாக வைகை ஆற்றில் மின்னொளி அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா தொடர்ந்து 13 ஆவது ஆண்டாக வைகை ஆற்றில் மின்னொளி அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஜூன் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று அதாவது திங்கட்கிழமை நள்ளிரவு 12. 01 முதல் பால்குடம் அக்கினி சட்டி எடுக்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் சங்க கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவா நடத்தும்  முத்து முருகா அறக்கட்டளை சார்பில் ஒலி மின்னொளி அமைக்கும் நிகழ்ச்சி கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அதன் தொடர்ச்சியாக 13வது ஆண்டாக மின்னொளி அமைக்கும்  நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் சிவா தலைமை வகித்தார். சோழவந்தான்.முன்னாள் பேரூராட்சித் தலைவர் முருகேசன் மின்னொளியினை இயக்கி துவக்கி வைத்தார். பக்தர்களின் வசதிக்காக வைகை ஆற்றில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.  இதில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துப்பாண்டி, சேகர் , அசோக், சங்கையா, வணங்காமுடி, சந்திரன் உட்பட சங்கங்கோட்டை கிராமத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக முத்து முருகா அறக்கட்டளை சார்பில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக வைகை ஆற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா அக்கினி சட்டி பால்குடம் அன்று வைகையாற்றில் குடிநீர் வசதி செய்து தரப்படுகிறது .

Tags:    

Similar News