சோழவந்தான் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
மதுரை மாவட்டம் சோழவந்தானில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது
சோழவந்தானில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். துணை ஆளுநர் சசிகுமார் முன்னிலை வகித்தார். நிர்வாகி கண்ணன் வரவேற்றார். இந்த ஆண்டிற்கான லயன்ஸ் சங்க தலைவராக டாக்டர் மருதுபாண்டியன் ,செயலாளராக பிச்சை மணி, பொருளாளராக காந்தன் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களை, முன்னாள் தலைவர் ஆறுமுகம், செயலாளர் அருள்ராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.