சோழவந்தான்; ஜெனகை மாரியம்மன், சிம்ம வாகனத்தில் பவனி

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 2ம் நாள் மண்டகப்படி எம்விஎம் குடும்பத்தார் சார்பில் நடைபெற்றது.

Update: 2024-06-12 10:39 GMT

ஜெனகை மாரியம்மன், சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா இரண்டாம் நாள் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இரண்டாம் நாளான நேற்று சோழவந்தான் பூ மேட்டு தெரு கிராமத் தலைவர் மணி முத்தையா குடும்பத்தார் ஏற்பாட்டில் நேற்று காலை ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து, அம்மன் பூ மேட்டு தெரு கிராமத்தில் உள்ள ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் சர்வ அலங்காரத்துடன் பொதுமக்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் இரவு 9 மணிக்கு மேல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஜெனகை மாரியம்மன் சப்பரத்துடன் ஊர்வலமாக வந்தனர் சோழவந்தானில் வடக்கு ரத வீதி பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேலரத வீதி வழியாக கோவிலுக்கு வந்த அம்மனை வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் வழிபட்டனர்.

கோவில் முன்பு பூ மேட்டு தெரு கிராமத் தலைவர் மணி முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து பெண்கள் வைகை ஆற்றுக்கு சென்று முளைப்பாரி கரைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இரண்டாம் நாள் மண்டக படிக்கான ஏற்பாடுகளை எம் விஎம் மணி முத்தையா மற்றும் சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் மணி முத்தையா சோழவந்தான் அரிமா சங்க தலைவர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பூ மேட்டு தெரு கிராமத்தினர் செய்திருந்தனர்.

Similar News