சோழவந்தான் பேரூராட்சியில் முன்னாள் ராணுவ வீரர் மனுத்தாக்கல்

சோழவந்தான் பேரூராட்சியில் போட்டியிட தேமுதிக சார்பாக முன்னாள் ராணுவ வீரர் வேட்புமனு தாக்கல் செய்தார்.;

Update: 2022-02-01 09:44 GMT

தேமுதிக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ராணுவ வீரர் தங்கராஜ்.

தமிழகத்தில்நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பகுதியான பசும்பொன் நகரில் போட்டியிடுவதற்கு தேமுதிக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்ட துணைச் செயலாளராக முன்னாள் ராணுவ வீரர் தங்கராஜ் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜெனகை மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து, அங்கிருந்து ஊர்வலமாக வந்து பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பேரூராட்சி 3 வது வார்டு போட்டியிடவுள்ள தங்கராஜ் கூறும்போது, தேமுதிக சார்பில் தான் போட்டியிடுவதாகவும் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும் கூறினார்.

Tags:    

Similar News