சோழவந்தான் நகரில் தன் சொந்த டிராக்டரில் குப்பைகளை அள்ளிய மன்ற உறுப்பினர்

சோழவந்தான் பேரூராட்சியில் சொந்த செலவில் குப்பைகளை அகற்றிய வார்டு கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுகள்

Update: 2022-03-15 08:00 GMT

சோழவந்தான் பேரூராட்சியில் தனது சொந்த செலவில் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்ட  எட்டாவது வார்டு கவுன்சிலர் மருதுபாண்டியன்

சோழவந்தான் பேரூராட்சியில் சொந்த செலவில் குப்பைகளை அகற்றிய வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் மருதுபாண்டிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட தொழிலதிபர் மருதுபாண்டியன், தனது சொந்தச் செலவில், ஜேசிபி வாகனத்தை கொண்டு குப்பைகளை அகற்றி வருகிறார். அகற்றிய குப்பைகளை உடனடியாக டிராக்டர் மூலம் கொண்டு செல்ல விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் இரட்டை அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் சுற்றுப்புற சுகாதாரம் பேணி காக்கப்படும் என்று மருதுபாண்டியன் தெரிவித்தார். அவரது செயலை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News