மதுரை அருகே சோழவந்தான் வைகை ஆற்று பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்

வைகைக்கரை தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்;

Update: 2021-11-27 06:45 GMT

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் வைகை நதியில் மழைநீர் பெருக்கெடுத்துள்ள பகுதிகளை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பார்வையிட்டார்.

மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வைகை கரையோரமாக குடியிருக்கும் பொது மக்களை, அரசு அதிகாரிகள் மேடான பகுதிக்கு செல்ல கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். சோழவந்தான் வைகை ஆற்றுப் பகுதிகளை, முன்னாள் அமைச்சர் உதயக்குமார், ஐயப்பன் எம்.எல்.ஏ., அதிமுக ஓன்றியச் செயலாளர் கொரியர் கணேசன், மகளீர் பிரிவு நிர்வாகி லெட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் க. நாகராஜன், கச்சிராயிருப்பு முனியாண்டி, நகர செயலாளர் முருகேசன், துரை புஷ்பம் உள்ளிட்டோருடன் சென்று, வைகைக் கரை தாழ்வான பகுதியில் குடியிருப்பில் வசிப்பவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News