சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலய விழாவில் ஆன்மிக சொற்பொழிவு
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா ஏழாம் நாள் திருவிழா அர்ஜுன் தபசு விழா நடைபெற்றது;
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில்.ஆன்மீக சொற்பொழிவு
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா ஏழாம் நாள் திருவிழா அர்ஜுன் தபசு விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடந்து. அர்ஜுனன் தவசு மரத்தில் தவம் இருந்தார். விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன் மகாபாரத சொற்பொழிவாற்றினார் .
பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பாக சகோதரி பிகே. கீதா, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். இதைத்தொடர்ந்து ஆன்மீக கலை நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவிற்கு முன்னாள் சேர்மன் எம் .கே. முருகேசன் தலைமை வகித்தார். பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆதிபெருமாள் வரவேற்றார். முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணு பிரசாத், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார.