அரசு பணிக்கான குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக ஆர்வமுடன் மையங்களில் குவிந்த தேர்வர்கள்

சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக மையங்களில் குவிந்த தேர்வர்கள்;

Update: 2022-07-24 07:30 GMT

சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு பகுதி பள்ளிகளில் அரசு பணிக்கான குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக ஆர்வமுடன் மையங்களில் குவிந்த தேர்வர்கள்

சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு பகுதி பள்ளிகளில் அரசு பணிக்கான குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக ஆர்வமுடன் மையங்களில் குவிந்த தேர்வர்கள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணி புரிவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாசம் டிஎன்பிஎஸ்சி மூலம் அறிவிக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று தேர்வு நடைபெற்றது. சுமார் 7000க்கும் மேற்பட்ட அரசு பணிகளுக்கு சுமார்24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

மதுரை மாவட்டத்தில், மட்டும் 419 மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 569 தேர்வு எழுதுகின்றனர். குறிப்பாக, சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை முதல் வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் மூலம் வினாத்தாள்கள் ஒவ்வொரு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காலை 8:30 மணி முதல் தேர்வு மையங்களில் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இதற்கான ஏற்பாடுகளை ,மதுரை மாவட்ட நிர்வாகம்  செய்து வந்த நிலையில், அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினர்.

 இதற்காக கொரோனா தடுப்பு நடவடிக்கை ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தனர்.மேலும், ஒவ்வொரு மையத்திற்கும் போதிய அளவில் காவல்துறை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இன்று ஒன்பது முப்பது மணி முதல் 12 30 வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 8:30 மணி முதல் தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பின்பு வரும் தேர்வர்களை தேர்வு எழுத தேர்வு மைய அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து வருவதாகவும், ஒரு சில இடங்களில் வெகு தூரத்திலிருந்து தேர்வு எழுத வரும் தேர்வர்களுக்கு அனுமதி அளித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News