வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை: அலங்காநல்லூரில் பாமகவினர் விழிப்புணர்வு

வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க அலங்காநல்லூரில் பாமகவினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Update: 2023-04-02 08:25 GMT

அலங்காநல்லூரில், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி, பாமக விழிப்புணர்வு நோட்டீசை வழங்கினர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டு கடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பொருளாதாரம் காக்கும் வணிகர்களே தமிழைக் காக்க வாருங்கள் என்று கூறிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் ராமச்சந்திரன், முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கிட்டு, கலந்து கொண்டு தலைமைக் கழகம் வழங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக கொடுத்து பதகைகளில் சரியான தமிழ் சொற்கள் எழுத வேண்டும் என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களின் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அய்யா மருத்துவர் உத்தரவுக்கிணங்க இன்று இந்த கேட்டுக்கடை பகுதியில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் எங்கள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பெயர் பலகைகளில் தமிழில் எழுதாத வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுப்பதுடன் பிறமொழி சொற்கள் எழுதப்பட்டுள்ள இடங்களில் மை மற்றும் பெயிண்ட் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்த இடங்களை அளிக்கப்படும். அதனால் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதில் ,மாவட்டத் தலைவர் சேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News