பாலமேட்டில் பரிசோதனை இல்லாமல் வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்பட்ட காளைகள்

பாலமேட்டில் பரிசோதனை இல்லாமல் வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்பட்ட காளைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-01-16 09:15 GMT

பாலமேடு ஜல்லிக்கட்டில்,  மருத்துவ பரிசோதனை இன்றி, வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்பட்ட காளைகள்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளமல் வாடிவாசலுக்கு அழைத்துச் செல்லப்படும் காளைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்து முடிந்தது.

அதனை தொடர்ந்து பொங்கல் திருநாளன்று மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை தொடர்ந்து  உலகப் புகழ் பெற்ற மதுரை அருகே, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி  இன்று காலை  தொடங்கியது. இந்த போட்டியில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் பேட்ச் பேட்ச் ஆக பிடித்து அடக்கினார்கள். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. சில முரட்டு காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்றன. அப்படி  சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காலை தொடங்கிய போட்டியில் மதியம்  12 மணி அளவில் படி 430 காளைகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு வாடி வாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் திடீரென காளைகளின் மருத்துவ பரிசோதனை மையத்திற்கு வந்து ஒரு சில காளைகளை மருத்துவ பரிசோதனை ஏதும் மேற்கொள்ளாமல் வாடிவாசலுக்கு செல்லும்படி காளையின் உரியாமையாளரிட் கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து  காளைகளின் உரிமையாளர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாமல் காளைகளை வாடிவாசல் நோக்கி அழைத்துச் சென்றனர். இது குறித்து கால்நடை மருத்துவர்களும் கண்டு கொள்ளாதது போல் இருந்து விட்டார்களாம். இங்கு ஜல்லிக்கட்டு  மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்படாத காளைகள் வாடிவாசல் களத்திற்கு  செல்வதால், வாடிவாசலில் உள்ள மாடுபிடிவீரர்களுக்கு ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமோ என்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

Similar News