வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், ரத்த தான முகாம்:
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், நடைபெற்ற ரத்ததானமுகாமில் 50 பேர் ரத்ததானம் அளித்தனர்;
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், அருணா அம்மா மக்கள் குறைதீர்க்க வழிகாட்டும் மையம் சார்பாக, ரத்ததானமுகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் இளங்கோவன், சூரியா, வெங்கடேஷ்வரி, பிரியதர்ஷினி, கீதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் அன்பரசி வரவேற்றார்.
இந்த முகாமினை, டாக்டர் தனசேகரன் தொடக்கி வைத்து, இரத்ததான வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், உசிலம்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி மருத்துவர் உஷாராணி தலைமையில் மருத்துவக்குழுவினரும் அன்னை செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகளும் தன்னார்வ தொண்டர்கள், முன்னாள் கவுன்சிலர் சீனிராஜா, முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் பொன்ராம், ஜெயலலிதா பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், அ.தி.மு.க.வார்டு செயலாளர் வில்லி, ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் சூரியா, வெங்கடேஷ்வரி உள்ளிட்ட 50 பேர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். ஆற்றுபடுத்துநர் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.