திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ரத்த தானம்
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும், மதுரை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன;
மதுரை அருகே திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற ரத்ததானம்:
மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும், மதுரை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரகமும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் கல்லூரியின் பிரார்த்தனை அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் டி. வெங்கடேசன் மற்றும் கச்சைகட்டி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் எம். ராஜ்குமார் இரத்ததான முகாமை துவக்கி வைத்தனர். இம்முகாமில், மதுரை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கே.வி. அர்ஜீன்குமார், மேலக்கால் மருத்துவ அலுவலர், மருத்துவர் என். கிஷா மகேஷ், வாடிப்பட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர், திரு. பி. முனியசாமி, மேலக்கால் எச்ஐவி ஆலோசகர் இராஜேஷ், மேலக்கால் சுகாதார ஆய்வாளர் கே. கிருஷ்ணன், மேலக்கால் சுகாதார ஆய்வாளர் பி. பிரபாகரன் மற்றும் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் இரத்த வங்கி மருத்துவர் கங்காதேவி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு இரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் ஜி. அசோக்குமார், முனைவர் கே. ரமேஷ்குமார், முனைவர் ஜி.ராஜ்குமார், ஸ்ரீ எம். ரகு மற்றும் ஸ்ரீ என். தினகரன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்திருந்தனர். இம்முகாமில் 45 விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வு மாணவர்கள் தங்கள் இரத்தத்தினை தானம் செய்தனர்.