சோழவந்தானில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு
பாதயாத்திரையாக மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு வந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பளிக் கப்பட்டது
சோழவந்தானில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையாக வருகை புரிந்தார். அவருக்கு ,பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி என்ற முத்தையா தலைமையில், பாஜக தொண்டர்கள் மேளதாளத்துடன் அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்றனர்.
முன்னதாக, சோழவந்தான் அருகே ஊத்துக்குளி, தென்கரை ஆகிய இடங்களில் பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்து அண்ணாமலை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, சோழவந்தான் நகரில் முக்கிய வீதி வழியாக சென்று சோழவந்தான் அய்யவார் பொட்டலில் அவருக்கு,பாஜக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர் .பாஜக தலைவர் அண்ணாமலை சோழவந்தானுக்கு வருகை முன்னிட்டு சோழவந்தான் நகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.பாஜக தொண்டர்கள் அண்ணாமலை மீது பூமாரி பொழிந்தனர். ஏராளமான பெண்கள் மலர் தூவி அண்ணாமலை வரவேற்றனர்.
ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பிலான பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ளதாக அண்ணாமலை அறிவித்தார். ராமேசுவரத்தில் தொடங்கிய பாதயாத்திரை சென்னையில் நிறைவடைகிறது. ஜூலை 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேசுவரத்தில் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 6 மாதங்கள் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ள அண்ணாமலை, சென்னையில் ஜன. 11-ம் தேதி பாதயாத்திரையை நிறைவு செய்கிறார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.