சோழவந்தானில் தமிழ்புலவர் அரசன் சண்முகனார் பிறந்த நாள் விழா
இதையொட்டி அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது;
சோழவந்தானில் தமிழ் புலவர் அரசன் சண்முகனார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம்.சோழவந்தானில் பிறந்தவர் அரசன்சண்முகனார். இவர் தமிழுக்காக ஆற்றிய பணிகள் பல இவருடைய பெயரில் சோழவந்தான் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அரசன் சண்முனார் மேல்நிலைப் பள்ளியாக அரசு அறிவித்து செயல்பட்டு வருகிறது. இவருடைய 155 ஆவது பிறந்த நாள் விழா சோழவந்தானில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.
சோழவந்தான் அரசு அரசன்சண்முகனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்தியபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார்.
முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜ்குமார் அரசன் சண்முகனார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். அருணாசலம் லட்டு வழங்கினார். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஸ்ரீ பாலமுருகன் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கினார். விவேகானந்தர் கல்லூரி பேராசிரியர் முத்தையா, பள்ளிஆசிரியர் சோமசுந்தரம், மூர்த்தி ஆகியோர் அரசன்சண்முகனார் வரலாறு குறித்து பேசினார்கள்.பள்ளி கணினி ஆசிரியர் கார்த்தி நன்றி கூறினார்.
இதேபோல் மாரியம்மன் சந்நிதி தெருவில் உள்ள வ.உ.சி சிலை அருகே அரசன் சண்முகனார் படத்திறப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு வடக்குரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன் தலைமை வகித்தார். கவுன்சிலர் ரேகாராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.செயலாளர் சிங்கராஜ் வரவேற்றார். வ.உ.சி.அறக்கட்டளை தலைவர் பாஸ்கரன்அரசன் சண்முகனார் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
தெற்குரதவீதியில் உள்ள அரசன் சண்முகனார் பாடசாலையில் உள்ள திருவுருவ படத்திற்கு தெற்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் தங்கராஜ் மாலை அணிவித்தார். நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி தலைவர் அன்பு தலைமை வகித்தார். பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.நாகேந்திரன் வரவேற்றார். மணிகண்டன் கருந்தேஸ்வரன் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.
கின்னி மடத்தில் நடந்த விழாவிற்கு முன்னால் கிராமநிர்வாகஅலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அரசன் சண்முனார் சிலைக்கு கண்ணன் மாலை அணிவித்தார். கார்த்தி, விஜயகுமார் ஆகியோர் இனிப்பு வழங்கினர். சரவணன் மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள் வழங்கினார்.பல்வேறு இடங்களில் நடந்த அரசன் சண்முகனார் பிறந்த தின விழாவில் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.