விவேகானந்தா கல்லூரியில் அரசஞ்சண்முகனார் பிறந்த நாள் விழா
தியாகராசர் கல்லூரியின் மேனாள் முதல்வர் மு.அருணகிரி ஆசிரியர் மாணவர் உறவு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்;
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர் தினம் மற்றும் அரசஞ்சண்முகனார் பிறந்தநாள் விழா சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், ஆசிரியர் தினம் மற்றும் அரசஞ்சண்முகனார் பிறந்தநாள் விழா சிறப்புச் சொற்பொழிவு கல்லூரி இறை வழிபாட்டுக் கூடத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசி உரையாற்றினர். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வ.க.ராமகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். தியாகராசர் கல்லூரியின் மேனாள் முதல்வரும் தகைசால் பேராசிரியருமான முனைவர் மு.அருணகிரி, ஆசிரியர் மாணவர் உறவு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.முத்தமிழ், அரசஞ்சண்முகனாரின் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.இராமர் நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் கோ.பாலமுருகன் சு.முத்தையா, முனைவர் ரெ.சுதாகர் வடிவேலு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வைத், தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்தது.
விவேகானந்தர் கல்லூரி என்பது தன்னாட்சிப் பெற்ற ஆடவர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது மதுரை, திருவேடகத்தில் உள்ளது. இக்கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இது 1971 இல் சுவாமி சித்பவானந்தரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது இராமகிருஷ்ண தபோவனத்தால் நிர்வகிக்கிறது. இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரே குருகுல வாழ்க்கை கல்வி நிறுவனம் இதுவாகும். இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை 2014 ஆம் ஆண்டில் மீண்டும் அங்கீகாரம் பெற்றபோது கல்லூரிக்கு `ஏ 'தரத்தை வழங்கியுள்ளது. இது இக்னோ (இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகம்) கல்வி மையத்தைக் கொண்டுள்ளது. இக்னோ வழங்கும் சான்றிதழ் திட்டங்கள் மற்றும் பட்டப்படிப்புகளை கொண்டுள்ளது.
கல்லூரியில் தினசரி மூன்று கட்டாய செயல்களாக பிரார்த்தனைகள், யோகா விளையாட்டு போன்றவற்றையும், சிலம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விருப்ப விளையாட்டுகளும் உள்ளன. திருவனந்தபுரம் மேற்கு இராமகிருஷ்ண தபோவனமானது இதே வளாகத்தில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நரேந்திர நர்சரி பள்ளி நிர்வகிக்கிறது. மேலும் சோழவந்தானில் விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளியையும் நடத்தி வருகிறது,
வாழ்க்கைக்கான பயிற்சி மற்றும் எழுத்தறிவு கல்வி வழங்கப்படுகிறது.அதிகாலை 4.45 மணிக்கு அனைத்து மாணவர் களும் எழுந்திருக்கிறார்கள். சபையில் பிரார்த்தனையானது ஒரு நாளைக்கு மூன்று முறையும், வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமையன்று பஜனைஒவ்வொரு பிராத்தனையின்போதும் சூர்யா காயத்ரி ஐந்து முறை முழங்கப்படுகிறது
ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு, மாலை சிற்றுண்டி பரிமாறுகிறார்கள்.ஒவ்வொரு உணவிற்கு முன்னும் பிரம்மார்பணம் (கடவுளிடம் அருளைக் கூறுவது) முழங்கப்படுகிறது.கல்லூரியில் கைகுத்தல் அரிசி, ராகி-மால்ட், இற்கை முறையிலான பழங்கள், காய்கறிகள், தூய பால் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.உடல் பயிற்சிப் பணிகளை கண்காணிப்புக் குழு மாணவர் மேற்பார்வையாளர்கள்மாணவர்களுக்கு தற்காப்பு கலைகள் மற்றும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியை மூத்த மாணவர்கள் அளிக்கின்றனர்.ஒவ்வொரு மாணவனின் உடல் பணிகள் மாதாந்திர மதிப்பீடு செய்யப்படுகிறது
ஒரு வாரத்தில் மூன்று நாட்களுக்கு பாரம்பரிய உடை மற்றும் சீருடைசூரியா நமஸ்காரம் மற்றும் யோகாசனங்கள் அனைத்து மாணவர்களும் இணைந்து கூட்டாக செய்தல், ஒவ்வொரு ஆண்டும் விவேகானந்தர் பிறந்த நாளில் ஏடகநாதேசுவரர் கோயிலுக்கு ஊர்வலம் செல்லுதல், அவ்வப்போது துறவிகளின் வருகை அனைத்து மாணவர்களும் தேசிய பாடலான "வந்தே மாதரம்" பாடுதல்.பட்டப்படிப்பு சான்றிதழைப் போலவே கல்விக் காலத்தின் முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் ஆளுமை மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
1971 முதல் பண்டைய குருகுல அமைப்பின் மறு உருவாக்கம்.வாழ்க்கைக்கான பயிற்சி மற்றும் எழுத்தறிவு கல்வி வழங்கப்படுகிறது.அதிகாலை 4.45 மணிக்கு அனைத்து மாணவர்களும் எழுந்திருக்கிறார்கள்.சபையில் பிரார்த்தனை யானது ஒரு நாளைக்கு மூன்று முறையும், வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமையன்று பஜனை.ஒவ்வொரு பிராத்தனை யின்போதும் சூர்யா காயத்ரி ஐந்து முறை முழங்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு, மாலை சிற்றுண்டி பரிமாறுகிறார்கள்.ஒவ்வொரு உணவிற்கு முன்னும் பிரம்மார்பணம் (கடவுளிடம் அருளைக் கூறுவது) முழங்கப்படுகிறதுகல்லூரியில் கைகுத்தல் அரிசி, ராகி-மால்ட், இற்கை முறையிலான பழங்கள், காய்கறிகள், தூய பால் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.உடல் பயிற்சிப் பணிகளை கண்காணிப்புக் குழு மாணவர் மேற்பார்வையாளர்கள்மாணவர்களுக்கு தற்காப்பு கலைகள் மற்றும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியை மூத்த மாணவர்கள் அளிக்கின்றனர்.
ஒவ்வொரு மாணவனின் உடல் பணிகள் மாதாந்திர மதிப்பீடு செய்யப்படுகிறது.ஒரு வாரத்தில் மூன்று நாட்களுக்கு பாரம்பரிய உடை மற்றும் சீருடைசூரியா நமஸ்காரம் மற்றும் யோகாசனங்கள் அனைத்து மாணவர்களும் இணைந்து கூட்டாக செய்தல்,ஒவ்வொரு ஆண்டும் விவேகானந்தர் பிறந்த நாளில் ஏடகநாதேசுவரர் கோயிலுக்கு ஊர்வலம் செல்லுதல்அவ்வப்போது துறவிகளின் வருகை,அனைத்து மாணவர்களும் தேசிய பாடலான "வந்தே மாதரம்" பாடுதல். பட்டப்படிப்பு சான்றிதழைப் போலவே கல்விக் காலத்தின் முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் ஆளுமை மதிப்பீட்டு சான்றிதழ். 1987 முதல் தன்னாட்சி.2002 முதல் என்ஏஏசி-ஆல் 'ஏ' தர மதிப்பீடு பெற்ற கல்வி நிறுவனமாகத்திகழ்கிறது.