இரும்பாடி ,பகவதி அம்மன் கோவில் ஆலய பங்குனி விழா: திரண்ட பக்தர்கள்!
இரும்பாடி ,பகவதி அம்மன் கோவில் ஆலய பங்குனி விழாவைக் காண பக்தர்கள் திரண்டனர்;
சோழவந்தான் அருகே இரும்பாடி பகவதி அம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா:
சோழவந்தான்:
மதுரை,
சோழவந்தான் அருகே, இரும்பாடி பகவதி அம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. கடந்த ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை வைகை ஆற்றுக்கு சென்று சக்தி கிரகம் முளைப்பாரி எடுத்தல் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர் .
அன்று இரவு ஏனாதி கருப்பையா குழுவினரின் நையாண்டி மேளம் மற்றும் திருச்சி சத்திரம் ஆறுமுக லட்சுமி கரகாட்ட குழுவினரின் கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, 10ஆம் தேதி புதன்கிழமை காலை வைகை ஆற்றிற்கு சென்று பால் குடம் எடுத்தல் மற்றும் மாலை அம்மனுக்கு அக்கினி சட்டி எடுத்தல் நடைபெற்றது. இதில், கிராம மக்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, இரவு 9 மணிக்கு சக்தி கிரகத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்று முளைப்பாரியை வைகை ஆற்றல் பெண்கள் கரைத்தனர். திருவிழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.