ஆடி அமாவாசை: தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை கிராம மக்கள் முடிவு
ஆடி அமாவாசை, நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்வது கிடையதாம்:;
ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவேடகம் சோழவந்தான் படித்துறைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை கிராம மக்கள் முடிவு.
கொரோனா 3- வது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு ஆடி அமாவாசையை தர்பனம் ஆற்று படுகையில் செய்வது கிடையாது.
வருடா வருடம், ஆடி அமாவாசை, அன்று மக்கள் இறந்த அவர்கள், முன்னோர்களான பித்ருக்களை நினைத்து புனித நீராடி கடல் மற்றும் ஆற்று படுகையில் பித்ரு தர்பனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு கொரானா பரவல் காரணமாக, மதுரை பேச்சியம்மன் படித்துரை,திருப்புவனம்,திருவேடகம், சோழவந்தான் போன்ற சுற்று வட்டார பகுதிகளில் தர்ப்பணம் கிடையாது என்று அந்த கிராம தலைமை புரோகிதர்களாலும் கிராம பொது மக்களாலும் முடிவு செய்யப்பட்டதாக ஜோசியர் கோபால்சாமி ஐயர் தெரிவித்தார்.