மதுரை காமராசர் பல்கலையில் மாற்றுத் திறனாளி ஊழியர் தீக்குளிக்க முயற்சி
மாற்றுத்திறனாளி ஊழியரான செந்தில்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது;
மதுரை காமராசர் பல்கலையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டி மாற்று திறனாளி ஊழியர் தீக்குளிக்க முயற்சி
மதுரை காமராசர் பல்கலையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டி மாற்று திறனாளி ஊழியர் தீக்குளிக்க முயற்சி
மதுரை காமராசர் பல்கலைக்கழக பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் தொடர் போராடம் 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதிச்சுமையை காரணம் காட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த ஊழியர்களை (தொகுப்பூதிய, தற்காலிக பணியாளர்களை) 136 நபர்களை பணி நீக்கம் செய்தனர். இதனைக் கண்டித்தும், தங்களது வாழ்வாதாரம் பறிபோனதை கடந்த எட்டு நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் இருந்து வரக்கூடிய நிலையில்,136 ஊழியர்களும் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தொடர்ந்து பல்வேறு முறைகளில் ஊழியர்கள் சார்பில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் எந்த முடிவும் எட்டவில்லை. தீர்வு எட்டாத காரணத்தினால் வேதனையடைந்த மாற்றுத்திறனாளி ஊழியரான செந்தில்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் ,சமயநல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நாகமலைபுதுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாற்று திறனாளி ஊழியர் செந்தில்குமார் மேல் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக மீட்டனர்.