மதுரை அருகே அலங்காநல்லூரில் பா.ஜ.க.வினர் தமிழக அரசை கண்டித்து சாலை மறியல்

மதுரை அருகே அலங்காநல்லூரில் பா.ஜ.க.வினர் தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-01-18 10:36 GMT

பா.ஜ.க. சார்பில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியல் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக் கடையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர் .

பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறையாக வரைமுறை செய்யாமல் ,உள்ளூர் காளைகள் மற்றும் உள்ளூர் வீரர்களுக்கு அனுமதி வழங்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு அனுமதி வழங்கியதாக தெரிவித்தும், கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு உடனடியாக அலங்காநல்லூர் ஸ்ரீ முனியாண்டி சுவாமி பெயரை வைத்திட கோரியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் தலைமையிலும் மாவட்ட துணைத் தலைவரும் தொகுதி அமைப்பாளருமான கோவிந்த மூர்த்தி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, கேட்டுகடை மதுரை மெயின் ரோட்டில் அமர்ந்து 80 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் தகவல் அறிந்து, விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால், அலங்காநல்லூர் மதுரை செல்லும் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதில், தொகுதி பொறுப்பாளர் ராஜா, ராமதாஸ், மண்டலத் தலைவர்கள் இருளப்பன், தங்கதுரை, பொதுச் செயலாளர்கள் கணேசன், செல்லப்பாண்டி, மாவட்ட செயற்குழு ரவிசங்கர், சந்திரபோஸ், மாவட்டச்செயலாளர் சித்ராதேவி, ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திக், ஒன்றியச் செயலாளர் பாலமுருகன், பட்டியல் அணி மாவட்டத்தலைவர் வேல்முருகன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் சாந்தகுமாரி, மற்றும் அமராவதி, மகளிர் அணி பொதுச் செயலாளர் முனீஸ்வரி, பட்டியல் அணி மாவட்டச் செயலாளர் சித்ரா, மருத்துவப் பிரிவு சுரேஷ், மற்றும் மகாலிங்கம், அசோக், கருப்பசாமி, வலசை சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News