செக்கானூரணியில் அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது
செக்கானூரணியில் அதிமுகவினருக்கு எதிராக திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சீர்மரபினர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
செக்கானூரணியில் அதிமுகவினருக்கு எதிராக திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சீர்மரபினர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் செக்காணூரணியில், கள்ளர் பள்ளிகள் விவகாரம் தொடர்பாக, அதிமுக சார்பில் உண்ணாவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு, எதிராகவும், அதிமுகவினரை கண்டித்தும், தமிழ்நாடு சீர்மரபினர் நலச் சங்க நிர்வாகிகள் மேலக் கால்தவமணி தலைமையில், செக்காணூரணி தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில்இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட சீர்மரபினர் சங்கத்தினரை, குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
டிஎன்டி ஒன்றை சான்று கேட்டு போராடி கொண்டிருந்த போது, மௌனமாக இருந்த அதிமுக இப்போது உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துவதாக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.