மதுரை அருகே சோழவந்தானில் அரிமா சங்க கூட்டம்
சோழவந்தான் பேருந்து நிறுத்தங்களில் அரசு அனுமதி பெற்று நிழற்குடை அமைக்க ஆவண செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;
மதுரை அருகே சோழவந்தானில் அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, எம். வி. எம். கலைவாணி பள்ளி தாளாளரும், தொழிலதிபருமான கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரன், பொருளாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க வளர்ச்சி பணிகள் குறித்து, டாக்டர் சசிகுமார், இன்ஜினியர் செல்ல பாண்டியன், பிரேமா செல்ல பாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றி பேசினார்கள். உறுப்பினர்கள் கண்ணன், ஜவகர், தங்கராஜ் ,காந்தன், பாஸ்கரன், முத்துலிங்கம்,டிஜேஆறுமுகம், செழியன், நூலகர் ஆறுமுகம் மற்றும் புதிய உறுப்பினர் தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .
கூட்டத்தில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்குவது, அரிமா சங்க கட்டிடத்தை புதுப்பிப்பது, அரிமா சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, மாதம் தோறும் மருத்துவ முகாம் கண் சிகிச்சை முகாம் உள்ளிட்டவைகள் நடத்துவது குறித்து தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன, அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருது பாண்டியனிடம் வைக்கப்பட்ட சோழவந்தான் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சோழவந்தான் பேருந்து நிறுத்தங்களில் அரசு அனுமதி பெற்று நிழற்குடை அமைக்க ஆவண செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.