மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொல்மரபியல் ஆய்வுக் கூடம்: அமைச்சர் தொடக்கம்
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் கூடிய தொல்மரபியல் ஆய்வுகூடத்தை தொடக்கி வைத்தார்
மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் கூடிய தொல்மரபியல் ஆய்வுகூடத்தை நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் துவக்கி வைத்தார்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 3.3 கோடி மதிப்பில் தொல் மரபியல் துறை மற்றும் ரூசா நிதி உதவியுடன் மரபியல் ஆய்வகம் மற்றும். தொல்லியல் உயிரியல் ஆய்வகம் தொடக்க விழா நடைபெற்றது.
திறப்பு விழாவுக்கு துணைவேந்தா் ஜா.குமாா் தலைமை வகித்தார். மரபியல் ஆய்வகத்தினை திறந்துவைத்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: பண்டைய பழமையை அறிய மிக உயரிய ஆய்வகம் அமைத்த பல்கலை கழகத்திற்கு வாழ்த்துகள். எனது தாத்தா பி.டி. ராஜன் மற்றும் மாமா பக்தவச்சலம் சென்னை மாகாண முதல்வராக இருந்தவர்கள்.இந்த நிறுவனத்திற்கு பங்கற்றியுள்ளனர்.
தமிழகத்தின் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியிலிருந்து பண்டைய மரபணுத் தரவுகளை பகுப்பாய்வு செய்யும் வகையில் ஹாா்வா் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதன்படி, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.தொல் மரபியல் ஆய்வகம், தொற்று நோய் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல் 3 ஆய்வகத்தில் பண்டைய மனித மரபணு பகுப்பாய்வு, விலங்குகள் மரபணு பகுப்பாய்வு, தாவர மரபணு பகுப்பாய்வுகள் செய்யவும், பண்டைய நுண் உயிரியல் (Micro biology) துகள்களை ஆய்வு செய்து ,தற்போது வேகமாக பரவிய கோவிட் 19 போன்ற நோய்களுக்கு ஆய்வின் மூலம் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கவும் ஆய்வகத்தில் நவீன நுண் உயிரியல் ஆய்வக வசதி உள்ளது.
ஆய்வக மற்றும் பகுப்பாய்வு முடிவுகள் கலந்தாய்வு செய்ய வசதியாக சிகாகோ பல்கலைகழகம், லக்னோ பீர்பால் சஹானி பல்கலை கழகத்துடன் இணைந்து காமராஜர் பல்கலை ஆய்வு மேற்கொள்ளும். உயிரியல், நுண் உயிரியல் படிப்புகளின் மூலம் பண்டைய கலாசார, பொருளாதார ,வாழ்வு நிலை விளக்கும் ஆய்வுகள்,பழைய மரபுகளை புதிய தலைமுறைத்து எடுத்துரைக்கும் ஆராய்ச்சிகளின் இன்றைய நிலவரம், பாடநூல்கள் மூலம் வரலாற்றில் இடம் பெறும் என்றார் நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன். முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் சிவகுமார் வரவேற்றார்