அருள்மிகு முச்சந்தி மாரியம்மன் ஆலய விழாவில் அன்னதானம்

Today Temple News In Tamil - மன்னாடிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 145 ஆம் ஆண்டு உற்சவ விழா;

Update: 2022-08-09 07:15 GMT

மன்னாடிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 145 ஆம் ஆண்டு உற்சவ விழா அன்னதானத்தில் பங்கேற்ற பக்தர்கள்

Today Temple News In Tamil - மன்னாடிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 145 ஆம் ஆண்டு உற்சவ விழா:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 145 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, கடந்த இரண்டாம் தேதி செவ்வாய் அன்று அம்மனுக்கு முத்து பரப்புதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஏழு நாட்களாக திருவிளக்கு பூஜையினை ஏற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இன்று காலை கோவில் முன்பாக அறுசுவை அன்னதானம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தில் உணவு அருந்தி மகிழ்ந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை‌ மேளதாளத்துடன் அதிர்வேட்டுக்கள் முழங்க வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்தல் முளைப்பாரி எடுத்தல் மகிழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, புதன்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து தீச்சட்டி பால்குடம் நிகழ்வு நடைபெற்று கோவில் முன்பாக ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் இளைஞர்கள் சார்பாக பொங்கல் வைத்தல் நிகழ்வு நடைபெறுகிறது.

வியாழக்கிழமை அதிகாலை சுமார் நான்கு மணி அளவில் கோவிலில் இருந்து சக்தி கரகம் விளையாட்டு கரகம் முளைப்பாரி ஆகியன எடுத்து வைகை ஆற்றல் கரைத்து விடும் நிகழ்வு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கே. எஸ். எம். ராஜபாண்டி, வெள்ளைச்சாமி, சுரேஷ், ரவிச்சந்திரன், மாரிமுத்து, பழனிமுத்து, சிவராமன், சூரிய பிரகாஷ் மற்றும் மன்னாடிமங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News