வாடிப்பட்டியில் அமமுக சார்பில் அன்னதானம்
Annadanam on behalf of Vadippatti Ammk;
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ,அருள்மிகு பால தண்டாயுதபாணி கோவில் வைகாசி திருவிழாவில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, அருள்மிகு பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில், சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிச்சட்டி பால்குடம் மற்றும் கரகம் எடுத்து வந்தனர் . பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.
காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை, வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் தொடங்கிவைத்தார். இதில் ,கழக நிர்வாகிகள் மகேஸ்வரன், வெள்ளிமலை, கார்த்திகேயன் தேவி, ஜாக்லின், ஷோபனா, சரவணன் மருது, பார்த்திபன், சிவபாலன், சுகுமாறன் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் பெற்றுக்கொண்ட பொதுமக்கள் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.