அலங்காநல்லூரில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அன்னதானம்

அலங்காநல்லூரில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-06-05 10:08 GMT

அலங்காநல்லூரில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள்  விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி, அலங்காநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் சிறப்பு பூஜை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சந்தைமேடு பகுதி, மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கட்சியின் கொடியேற்றி வைத்த எம்.எல்.ஏ. வெங்கடேசன் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற அன்னதான விழாவில், கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பேரூர் செயலாளர் ரகுபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுவாமிநாதன், ஒன்றியக்குழுத் தலைவர் பஞ்சு, துணைத்தலைவர் சங்கீதா மணிமாறன், அவைத்தலைவர் நடராஜன், ஒன்றியப் பொருளாளர் சுந்தர், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சுப்பாராயலு, மற்றும் திமுக அணி அமைப்பாளர்கள், மாவட்ட,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News