Ammk Booth Committee Meet அலங்காநல்லூரில்அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
Ammk Booth Committee Meet மதுரை அலங்காநல்லுாரில் அமமுக பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.;
அலங்காநல்லூரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
Ammk Booth Committee Meet
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சோழவந்தான் தொகுதி அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது .
இந்த கூட்டத்திற்கு, அலங்காநல்லூர் ஒன்றிய ச்செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டச் செயலாளர்கள் மேலூர் சரவணன், டேவிட் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது: அதிமுக தனிப்பெரும் சக்தியாக ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்குவதாக அதிமுக நிர்வாகிகள் பலர் கூறுவது ஏற்புடையது அல்ல. அதிமுக என்பது எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்ட கட்சி இன்று கயவர்கள் கூடாரமாக மாறிவிட்டது .
முதலில் அதிமுகவிற்கு துரோகம் செய்தது ஓபிஎஸ் .அதுக்கு அடுத்து ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்தது எடப்பாடி இவ்வாறு அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் செயல்படக்கூடிய எடப்பாடி கூட்டத்திலிருந்து அதிமுகவை முழுமையாக கைப்பற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், டிடிவி தலைமையில் மெகா கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார்கள்.
அதே போல், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மக்கள் மத்தியில் எடப்பாடியின் வஞ்சக முகத்திரையையும் கோடநாடு கொலை கொள்ளை நாடகத்தை வெட்ட வெளிச்சமாக அரங்கேற்றுவது தான் அம்மா முன்னேற்ற கழகத்தின் முதல் வேலையாக இருக்கும் என்று பேசினர்.இதில், நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர்கள் ரகுராஜன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், பேரூர் செயலாளர்கள் மதன், திரவியம், முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் வீரமாரி பாண்டியன், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பாலு, மாவட்ட இணைச்செயலாளர் சுமதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இளஞ்செழியன், சித்ரா, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் வக்கீல் சந்திரசேகரன் வேல்முருகன், பண்ணகுடி அசோக், நீதி, சங்கையா, உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..