சோழவந்தான் அருகே பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே பழைய மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது;
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 1992 93 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்கள் தங்களது நட்பை புதுப்பித்து பாராட்டும் வகையில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மத்திய சுங்க மற்றும் கலால் வரி உதவி ஆணையாளர் செல்வகுமார் மாணவர்களின் அழைப்பை ஏற்று வருகை புரிந்தார். சமய நல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன் ,சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், நாச்சிகுளம் ஊராட்சி மன்ற த் தலைவர் சுகுமாறன், ஒன்றியக் கவுன்சிலர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பம் வரவேற்றார்.உதவி தலைமையாசிரியர் கவிதா வாணி நன்றி கூறினார்.முன்னாள் மாணவர் கருப்பட்டி செந்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில், ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது .பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரம் உயர்த்தப்பட்ட கழிவறை கட்டி தரப்பட்டது. மாணவ மாணவியர் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர், அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 30 ஆண்டுகளுக்கு பின்பு தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்து தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து இதேபோல், பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பள்ளி மாணவர்களுக்கு உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அவர்கள் கூறினர் .