அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆலையை இயக்க தமிழக அரசு, போதுமான நிதியை ஒதுக்க வேண்டும், கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டும்;
அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அலங்காநல்லூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆலையை இயக்க தமிழக அரசு, போதுமான நிதியை ஒதுக்க வேண்டும், கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வேண்டும், உபமின் நிலையத்தில், மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் சி. ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர் ஆண்டிச்சாமி, மாவட்ட செயற்குழுக் உறுப்பினர் உமா மகேஸ்வரன், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.