அலங்காநல்லூர் செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
அலங்காநல்லூர் வியாபாரி சங்கத்திற்கு சொந்தமான அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
அலங்காநல்லூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வியாபாரி சங்கத்திற்கு சொந்தமான அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ,கோயில் முன்பாக உள்ள யாகசாலை மண்டபத்தில், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மஹா பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, குடங்கள் புறப்பட்டு, கோயிலில் வலம் வந்து, மகா கும்பாபிஷேம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அலங்காநல்லூர் வியாபாரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.