அலங்காநல்லூரில் பேரூராட்சித் தலைவியாக திமுக நிர்வாகி தேர்வு
அலங்காநல்லூரில், பேரூராட்சித் தலைவியாக, திமுக நிர்வாகி ரேணுகா ஈஸ்வரி தேர்வு செய்யப்பட்டார்.;
அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவராக, திமுக வேட்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் பொறுப்பேற்றார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில், பேரூராட்சி செயல் அலுவலர் ஷீலா பானு, தேர்தல் அலுவலர் ஈஸ்வரன், பால்பாண்டி, முன்னாள் சேர்மன் ரகுபதி, இடையபட்டி நடராசன், கவுன்சிலர் சாமிநாதன், டாக்டர் கோகுல், டாக்டர் பிரபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.