அலங்காநல்லூர் அருகே இலவச மருத்துவ முகாம்
அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சியில் ராக்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே, முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் ராக்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில், 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா, கருப்பு பூஞ்சை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், ஊராட்சிச் செயலர் செல்வமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர், மாலினி நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து வழங்கினார்.